கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி அறிமுகம்

0 16648

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.

இந்த தடுப்பூசியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி இன்று புதுடெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த தடுப்பூசியின் விலை 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய்வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புதிய தடுப்பூசியின் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments