ஐக்கிய அரபு நாடுகளில் 1,400 பள்ளி பேருந்துகளை வழங்கும் ஒப்பந்தத்தால், பங்குச்சந்தையில் 4.03 சதவீதம் உயர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள்
ஐக்கிய அரபு நாடுகளில், ஆயிரத்து 400 பள்ளி பேருந்துகள் வழங்குவதற்கான சுமார் 600 கோடி ($75.15 million) மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து, பங்குச்சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதம் உயர்வடைந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ராஸ் அல் கைமா உற்பத்தி ஆலையில் இருந்து இந்த பேருந்துகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
எமிரேட்ஸ் போக்குவரத்திற்கும், STS குழுமத்திற்கும் தயாரிக்கப்படவுள்ள 1,400 பள்ளி பேருந்துகளும் வழங்கப்படவுள்ளன.
Comments