மழை, வெள்ளத்தால் பாகிஸ்தானில் காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்வு.!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கின. அதோடு சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.
இதனால் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் தற்போது 300 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments