டீசல் , விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான மூலதன ஆதாய வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.!
Windfall Tax எனப்படும் மூலதன ஆதாய வரியை மத்திய அரசு இன்று முதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான சந்தை ஆதாய வரி ஒரு லிட்டருக்கு 7 ரூபாயில் இருந்து 13 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான சந்தை ஆதாய வரி இரண்டு ரூபாயில் இருந்து 9 ரூபாயும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியை டன்னுக்கு 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 13 ஆயிரத்து 300 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Comments