தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி உட்பட 17 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments