’ஐய் அம்மாவ பாத்துட்டேன்....’ 3 நாட்கள் தேடுதலுக்கு பின் தாயிடம் சேர்ந்த குட்டி யானை..!
உதகை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், 3 நாட்கள் தேடுதலுக்கு பின் தாய் யானையிடம் கொண்டு சேர்த்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன் மாவனல்லா பகுதியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை மீட்கப்பட்ட நிலையில், 8 குழுக்களாக பிரிந்து தாய் யானையை தேடி வந்தனர்.
நேற்றிரவு சீகூர் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று தனியாக இருப்பதை அறிந்த வனத்துறையினர், உடனடியாக குட்டியை அப்பகுதியில் விட்டனர். பின்னர் தாய் யானை, குட்டியை அழைத்துக் கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Comments