நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி.!

0 3051

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13 புள்ளி 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

இதே காலாண்டில் சீனா வெறும் பூஜ்யம் புள்ளி 4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன்மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

முதலாவது காலாண்டில், நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 36 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments