ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா.!
குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா செய்துள்ளார்
. கொரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே நட்டத்தை சந்தித்து வந்த ஸ்பைஸ் ஜெட், விமான எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களினாலும், பொருளாதார இழப்புகளினாலும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா பதவியை ராஜினாமா செய்தார்.
ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு ஆண்டின் 2-ஆவது காலாண்டில் அந்நிறுவனம் 789 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 729 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்தது. இதனிடையே, 200 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டுவதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Comments