காட்டாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேர்.. டிராக்டரில் சென்று கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து 6 பேரை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வள்ளிப்பட்டியில் கனமழை பெய்த நிலையில், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்போது, வெள்ளோடு பகுதியில் வேலைக்கு சென்று திரும்பிய 6 பேர் மதுபோதையில் காரில் வந்த நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர்.
இதனையடுத்து டிராக்டரில் சென்ற பொதுமக்கள் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
Comments