காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்..!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார். இத்தாலியில் வசித்து வந்த பாலோ மைனோ அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
90 வயதை தாண்டிய தனது தாயாரை காண கடந்த வாரமே சோனியா காந்தி இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி சனிக்கிழமை பாலோ மைனோ காலமானார்.
ஞாயிற்றுகிழமை அவரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி சடங்கில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
சோனியாகாந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments