2000 வாழைப்பூக்களால் உருவாக்கப்பட்ட விவசாய விநாயகர்..!
சென்னை மணலி புது நகரில் அய்யா கோவில் திடலில் இந்து முன்னணி சார்பில் இயற்கை விவசாயத்தை போற்றும் விதமாக 2 ஆயிரம் வாழைப்பூக்களை கொண்டு பிரமாண்ட விநாயகரை உருவாக்கி உள்ளனர்.
விநாயகர் சதூர்த்தியையொட்டி ரசாயணம் கலப்பில்லாத விநாயகர் சிலையை செய்தாலும் விஜர்சனத்திற்காக அதனை நீர் நிலைகளில் கரைக்க வேண்டி இருப்பதால் அதனை தவிர்க்கும் பொருட்டு சென்னை மணலி புது நகர் இந்து முன்னனி அமைப்பினர் விவசாயத்தை போற்றும் வகையில் வருடந்தோரும் விவசாய பொருட்களை கொண்டு பிரமாண்ட விநாயகர் சிலைகளை செய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு வைத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் தேங்காய், கரும்பு உள்ளிட்டவற்றால் விநாயகரை வடிமைத்தவர்கள் இந்த விநாயகர் சதூர்த்திக்காக வாழைப்பூக்களை கொண்டு விநாயகரை உருவாக்கி உள்ளனர். காதுகளுக்கு கரும்புகளும், அன்னாசி பழங்களால் கிரீடமும் சூட்டப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் வாழைப்பூக்கள், அன்னாசி பழங்கள், கரும்பு துண்டுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரை வியப்புடன் பார்க்கும் பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி செல்கின்றனர்.
விஜர்சன நாளில் இந்த வாழைப்பூக்களை பிரித்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்க இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்3.
Comments