காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளுக்குள் உள்புகுந்த வெள்ள நீர்!

0 3611

மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் 67 வீடுகளில் வெள்ள நீர் உள்புகுந்தது.  காவேரி கரையோர பகுதிகளான இந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராகவேந்திரா வீதி, முனியப்பன் வீதி உள்ளிட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் இருக்கும் மக்களை நேரில் சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு பொருட்களை வழங்கினார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேயுள்ள கொட்டச்சேடு பகுதியில், காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 46 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், காவிரியில் வினாடிக்கு 46 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments