ஆம்புலன்ஸ் வராததால் பிரசவ வலியால் துடித்த மனைவியை தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனையில் அனுமதித்த கணவன்!

0 3650

மத்தியப்பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை ஒருவர் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அவர் ஆன்புலன்சை அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், வேறு வழியின்றி அவர் தனது மனைவியை தள்ளு வண்டியில் படுக்க வைத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராதது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments