பணம் மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் சம்மன்..!

0 3638

பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வரும் செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பறித்த வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர், அந்த பணத்தில் இருந்து ஜாக்குலினுக்கு 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

அதோடு ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை, நடிகை ஜாக்குலினை குற்றவாளியாக சேர்த்தது.

அதனடிப்படையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் செப்டம்பர் 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments