வளர்ப்பு நாய் குழந்தை மீது தாவி கடிக்க முயன்றதால் இரு குடும்பத்தினரிடையே தகராறு!

0 3741

சென்னை வில்லிவாக்கத்தில், வளர்ப்பு நாய் குழந்தையை கடிக்க வந்ததால் ஏற்பட்ட தகராறில் இருபிரிவினர் ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சரண்யா என்பவரது வளர்ப்பு நாய், அதே குடியிருப்பில்  வசிக்கும் காமில் என்பவரின் உறவினர்  குழந்தையை தாவி கடிக்க முற்பட்டதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், குழந்தையின் தந்தை மற்றும் அவரது உறவினரை சரண்யா குடும்பத்தினர் தாக்கும் காட்சி சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments