முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.!

0 4645

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவணபாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்தவர் சரவண பாண்டியன். ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளரான இவர், அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாருக்கு போன் செய்து, ஆரம்பத்தில் நன்றாக பேசினார்.

பின்னர் திடீரென நீங்கள் பூலித்தேவன் ஜெயந்தி விழாவுக்கு தென்காசிக்கு வரும் போது உங்களுக்கு பாடை கட்டி மாலையோடு காத்திருக்கிறோம் என கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியனை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments