ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர்..!
உதகை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டியானையை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்க்க வனப்பகுதியில் விட்ட நிலையில், அந்த குட்டி யானை மீண்டும் வனத்துறையினரிடமே திரும்பி வந்தது.
நேற்று முன்தினம் மாவனள்ளா பகுதியில் உள்ள காரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், சடாப்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.
அன்றிரவு தாய் யானை, குட்டியை அழைத்து செல்ல வரும் என அவர்கள் எதிர்பார்த்த நிலையில், தாய் யானை வரவில்லை.
இரு நாட்களாக மசினகுடி, சிங்காரா பகுதிகளில் தாய் யானையுடன், குட்டியை சேர்க்க முயற்சித்து வரும் வனத்துறையினர் குளுக்கோஸ், பால் உள்ளிட்டவற்றை கொடுத்து குட்டி யானையை பாதுகாத்து வருகின்றனர்.
Comments