கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுவிப்பு.!

0 4252

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருந்து சிபிசிஐடி போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 5 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து 5 பேரும் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தனர். பள்ளியில் இருந்து வந்திருந்த மற்ற ஆசிரியர்கள் இவர்களை கார்களில் அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments