ராஜஸ்தானில் தொடங்கியுள்ள கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில், முதியோர்களும், இளைஞர்களும் பங்கேற்ற வித்தியாசமான கபடிப்போட்டி
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கியுள்ள கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில், முதியோர்களும், இளைஞர்களும் பங்கேற்ற வித்தியாசமான கபடிப்போட்டி நடைப்பெற்றது.
அம்மாநிலத்தில் சுமார் 44 ஆயிரம் கிராமங்களில் ஒருமாத கால கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்பதற்காக 30 லட்சம் கிராமமக்கள் தங்களது பெயரை பதிவுசெய்துள்ளனர்.
இதில் 9 லட்சம் பேர் பெண்கள். வாலிபால், ஹாக்கி, டென்னிஸ் பால் கிரிக்கெட், கபடி, கோ கோ உள்ளிட்ட போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன. குறிப்பாக முதியவர்கள் - இளைஞர்கள் இடையே நடைப்பெற்ற கபடி போட்டி அனைவரையும் கவர்ந்தது
Comments