கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு..? உணவில் புழு, பூச்சி இருப்பதாக கூறி மாணவிகள் ஆர்ப்பாட்டம்..!

0 3888
கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு..? உணவில் புழு, பூச்சி இருப்பதாக கூறி மாணவிகள் ஆர்ப்பாட்டம்..!

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பல்கலைக்கழகத்தில் உள்ள 8க்கும் மேற்பட்ட விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

மாணவிகள் அனைவருக்கும் தற்போது ஒரே இடத்தில் சமையல் செய்து பரிமாறப்படும் நிலையில், உணவில் புழு, பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறும் மாணவிகள், காலை காலி தட்டு, பக்கெட்டுகளுடன் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments