ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்க முடியாததால் பறிபோன உயிர்.!

0 4297

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட நோயாளி, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாததால் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்தார்.

கோழிக்கோடு அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடம் போராடி கதவை உடைத்த பொதுமக்கள், நோயாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments