நகைக்கடையில் கவரிங் நகைகளை கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பெண்கள்.!
உளுந்தூர்பேட்டை நகைக்கடையில் கவரிங் நகைகளை கொடுத்து தங்க நகைகளை எடுத்துச் சென்ற 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நந்தகுமார் என்பவரின் கடைக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்திருந்த 5சவரன் பழைய தங்க நகைகளை மாற்றிக் கொண்டு அதே எடையில் 916 கேடிஎம் ரக தங்க நகைகளை பெற்றுக் கொண்டனர்.
முதலில் சோதனைக்காக நகையை கொடுத்த போது அது 916 கேடிஎம் தரம் கொண்ட தங்க நகை என்பதை நந்தகுமார் உறுதி செய்துள்ளார். ஆனால் பின்னர் அந்த பெண்கள் அந்த நகையை பையில் போட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றி புதிய நகைகளை வாங்கிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
Comments