உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைப் பட்டியலிட புதிய நடைமுறை - புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைப் பட்டியலிட விரைவில் புதிய நடைமுறை வகுக்கப்பட உள்ளதாக புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க எந்த நடைமுறை கையாளப்பட உள்ளது என்று தலைமை நீதிபதியிடம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தலைமை நீதிபதி யு.யு. லலித், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதியின் அறையில் வழக்கறிஞர்கள் கோருவதைத் தவிர்த்து, நீதிமன்றப் பதிவாளர் முன்பு மனுக்களை சமர்ப்பிக்கும் போதே அவசர விசாரணைக்கான வழக்கு எது என்பதைக் குறிப்பிடுமாறு வலியுறுத்தினார்.
வியாழக்கிழமைக்குள் ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments