இந்தியாவில் கடந்த 2021-ல் நிகழ்ந்த 4.22 லட்சம் விபத்தில் சிக்கி 1.73 லட்சம் பேர் உயிரிழப்பு - தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
இந்தியாவில், கடந்த 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகள் 16 புள்ளி 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஐம்பத்து ஏழாயிரத்து 90 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த நான்கு லட்சத்து 22 ஆயிரம் விபத்துகளில் சிக்கி, ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் விபத்தில் சிக்கி இருபத்தி நான்காயிரத்து 711 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக தமிழகத்தில் பதினாறாயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments