பாமாயிலை அள்ளிக்கொடுக்கும் எண்ணெய் பனை.. அறியாமையால் பயிரிட தயங்கும் விவசாயிகள்..!

0 4592
பாமாயிலை அள்ளிக்கொடுக்கும் எண்ணெய் பனை.. அறியாமையால் பயிரிட தயங்கும் விவசாயிகள்..!

பெரும் வணிக சந்தை வாய்ப்புள்ள,  பாமாயிலை அள்ளிக்கொடுக்கும் எண்ணெய் பனை மரங்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதற்குரிய நல்ல மண்வளம் இருந்தும் அறியாமையால் விவசாயிகள் இதனை பயிரிட தயங்கும் நிலையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய் பனை என்பது பனை மர குடும்பத்தை சேர்ந்த ஒரு மர வகையாகும். இந்த மரங்கள் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

கடலை,கடுகு, சூரிய காந்தி, எள் மற்றும் தேங்காய் போன்ற மற்ற எண்ணெய் வித்துக்களை காட்டிலும் எண்ணெய் பனையில் பல மடங்கு அதிகமாக எண்ணெய் கிடைக்கிறது.

பொதுவாக ஒரு ஹெக்டேரில் பயிரிடப்படும் கடலையில் இருந்து 375 கிலோ அளவும், கடுகு பயிரிலிருந்து 560 கிலோவும், சூரியகாந்தியிலிருந்து 545 கிலோவும், எள்ளிலிருந்து 160 கிலோவும், தேங்காயிலிருந்து 970 கிலோ அளவுக்கு தான் எண்ணெய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு ஹெக்டேரில் பயிரிடப்படும் எண்ணெய் பனையிலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ வரை எண்ணெய் கிடைப்பதாக கூறப்படுகிறது..

இருப்பினும் , முதல் 4 ஆண்டுகளுக்கு வருமானம் கிடைக்காது , செலவு அதிகம் ஆகும் என நினைத்து தமிழக விவசாயிகள் இதனை பயிரிடுவதை தவிர்த்து வருவதாக வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழ் நாட்டில் இதற்கான நல்ல மண்வளம் இருந்தும் அறியாமையால் விவசாயிகள் இதனை பயிரிட தயங்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் எண்ணெய் பனை சாகுபடியில் செலவுகளும், சேதங்களும் மிகவும் குறைவு என்று வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எண்ணெய் பனையை ஊக்குவிக்க அரசு அளிக்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளை, தோட்டக்கலை துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments