விவசாய முன்னேற்றத்திற்கு 'ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்'

0 3544
விவசாய முன்னேற்றத்திற்கு 'ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்'

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை, மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்றும் ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதால் இத்திட்டம் மேலும் விரிவடையும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது. உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் சர்வதேச சந்தையை அடையும் நோக்கில் அத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வந்து, ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்பு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளை வளப்படுத்த ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் பெரிதும் உதவுவதாகவும், அப்பொருட்களை சர்வதேச அளவிற்கு காட்சிப்படுத்த சர்வதேச அளவிலான கண்காட்சிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடுத்தாண்டில் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பொருட்களை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தலாம் என்றும் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்தார்.

கைவினை கலைஞர்கள், மகளிர், விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்ட முன்னெடுப்புகள் வழிவகுக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments