"ஸ்ரீமதியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ, கொலையோ காரணமில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் வன்கொடுமையோ, கொலையோ இல்லை என உறுதியாவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாணவியின் மரண வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஜாமீனுக்கான நிபந்தனைகளை அறிவித்த நீதிபதி இளந்திரையன், மரணம் தொடர்பாக சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, நன்றாக படிக்கச் சொல்வது, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என தெளிவுபடுத்தி உள்ளார்.
மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் மாணவி மாடியிலிருந்து விழுந்தபோது மரத்தில் அடிபட்டதாலேயே உடலில் காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கைகளில் தெரியவருவதாக நீதிபதி கூறினார்.
பள்ளியின் 3வது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தக் கறை அல்ல, அவை வண்ணப்பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments