தைவான் ஜலசந்தியில் பயணித்த 2 அமெரிக்கப் போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக சீன ராணுவம் அறிவிப்பு!
தைவான் ஜலசந்தியில் பயணித்த இரண்டு அமெரிக்கக் கப்பல்களை கண்காணித்து வருவதாக சீனாவின் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அப்பகுதியை கடந்தன. அவ்வழியாக அமெரிக்கக் கப்பல்கள் வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த இரண்டு கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் சீன ராணுவம், தனது படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கட்டளையிட்டுள்ளது.
எந்த வகையான ஆத்திரமூட்டும் செயலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
Comments