சாலையில் நடந்து சென்ற முதியவருக்கு திடீர் நெஞ்சுவலி.. முதலுதவி அளித்த காவல் பெண் ஆய்வாளர்.!
சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தக்க நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றிய பெண் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சீனிவாசன் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் அப்படியே தரையில் சுருண்டு விழுந்துள்ளார். இதைக் கண்ட மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்ற போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
உடனடியாக அந்த காவல் ஆய்வாளர் அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அந்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
Comments