சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்.!

0 3041

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 37 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி விரைவு ரயிலில் பயணம் செய்த சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், பையில் கட்டுக்கட்டாக மறைத்து கொண்டுவரப்பட்ட 20 லட்ச ரூபாயையும், உடலில் கட்டி மறைத்து கொண்டு வரப்பட்ட 17 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்த்ராவ் என்பது தெரிய வந்தது. முறையான ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட அந்த பணம், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments