முதியவர்களை குறிவைத்து ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளை -சிக்கிய வட மாநில இளைஞர்கள்

0 4383

சென்னையில் ஏடிஎம்க்கு வரும் முதியவர்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த புண்ணியமூர்த்தி, தனது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 15ஆயிரம் ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டதாக எம்கேபி நகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை வாங்கி கொண்டு அவரிடம் வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து, சிசிடிவிக் காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து வட மாநில இளைஞர்கள் 3 பேரை
மீஞ்சூரில் வைத்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 ஏடிஎம் கார்டுகள், 10,000 ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments