மறைந்த இளவரசி டயானாவின் கறுப்பு நிற கார் ரூ.5.18 கோடிக்கு ஏலத்தில் விற்பனை..!
மறைந்த இளவரசி டயானாவின் கார் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையானது.
1985ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை டயானா பயன்படுத்திய போர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ வகை சேர்ந்த கறுப்பு நிற கார், பிரபலங்களின் கார்களை சேகரித்து வைத்திருக்கும் ஆல்டர்லே எட்ஜ் நிறுவனத்திடம் இருந்தது.
இங்கிலாந்தில் உள்ள வார்விஷைர் நகரில் ஆரம்ப விலையாக 90 ஆயிரம் ரூபாயாக ஏலத்தில் விடப்பட்ட கார், பலத்த போட்டிக்கு பிறகு 5 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
Comments