நக்சலைட்டுகள் பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என அமைச்சர் அமித்ஷா பேச்சு
தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளும் பாஜக ஆட்சியில் அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் தேசியப் புலனாய்வு முகமையின் கிளைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இடதுசாரி மாவோயிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகள் 120 மாவட்டங்களில் இருந்து 46 மாவட்டங்களாகக் குறைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தீவிரவாதம், இடதுசாரி வன்முறைகள், குற்றங்களுக்கு எதிராக ஒருபோதும் சகிப்புத் தன்மையை பிரதமர் மோடி அரசு காட்டாது என்றும் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.
Comments