இந்தி திரைப்பட பாடலுக்கு ஆட்டத்தில் அசத்தும் உகாண்டா சிறுவர்கள்..!

0 8907

ஆப்பிரிக்க சிறுவர்கள் இந்தி திரைப்பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உகாண்டாவைச் சேர்ந்த சிறுவர்கள் பாலிவுட் 'கலா சஷ்மா' பாடலுக்கு அற்புதமான ஒத்திசைவு மற்றும் நடன அமைப்புடன், உணர்ச்சியைத் தூண்டும் நடனத்தை ஆடி பார்ப்பவர்களின் மனம் கவர்கின்றனர். முதலில் ஒரு சிறுவன் முன்னால் நின்று ஆடுகிறான். சிறிது நேரத்தில் அவன் பின்னே செல்ல, மற்றொருவர் வந்து ஆடுகிறார்.

இரண்டாவதாக வந்து முன்னணியில் ஆடிய சிறுவன் பின்னால் போனதும், மற்றுமொரு சிறுவன் வந்து ஆடுகிறான். சிறுவர்கள் குழுவாக ஆடினாலும், அவர்கள் ஆட்டம் ஒன்று போல இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments