உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி: அதிபர் புதின் அறிவிப்பு
உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும், பிப்ரவரி 18-ந்தேதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியில் இருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments