ஸ்பைசஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

0 3286
ஸ்பைசஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஸ்பைசஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனங்கள் மிளகு, ஏலக்காய், போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்நிலையில், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய் வரை பெறலாம் என அறிவிப்பு வெளியிட்டு அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரைராஜ், அவரது மனைவி சாரதாவை கைது செய்தனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக, சென்னை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments