லத்ரது அணை பகுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் படகு சவாரியில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

0 3732
லத்ரது அணை பகுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் படகு சவாரியில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜே.எம்.எம்., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பேருந்தில் ஒன்றாக சென்ற அவர்கள் மீண்டும் ராஞ்சிக்கே திரும்பியுள்ளனர்.

நிலக்கரி சுரங்க குத்தகையை தனது பெயரிலேயே ஒதுக்கீடு செய்த புகாரில் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது பற்றி ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஞ்சியில் இருந்து 3 பேருந்துகளில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஹேமந்த் சோரன் புறப்பட்ட நிலையில், அவர்கள் சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதியில் படகு சவாரியில் ஈடுபட்ட அவர்கள், மீண்டும் இரவு ராஞ்சிக்கே திரும்பினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments