முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு புகுந்து 300 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

0 2489
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு புகுந்து 300 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

காஞ்சிபுரம் அருகே பெரியநத்தம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு புகுந்து 300 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரான கணபதி, தொழிற்சாலைகளுக்கு வெல்டிங் செய்து தரும் தொழில் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுவிட்டு காலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளே சென்று பார்க்கையில் பீரோ மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 300 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் பணம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக கணபதி போலீசில் புகாரளித்துள்ளார்.

கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து மர்ம கும்பலை தேடி வரும் போலீசார், வீட்டில் அதிகளவு பணம், நகைகளை வைத்திருந்தது தொடர்பாக கணபதியிடமும் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments