ஸ்ரீமதிக்காக ஆவேசமாகி ஜெயிலில் உள்ள 360 பேரின் நிலைமை அவ்வளவு தானா ? ஒரு வரி கூட கோரிக்கையில் இல்லை..!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி அளித்துள்ள கோரிக்கை மனுவில் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக ஒரு வரி கோரிக்கை கூட இடம் பெறவில்லை.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பல்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவியின் தாய் செல்வி ,கணவர் ராமலிங்கம் ஆகியோர் தங்கள் ஊர பஞ்சாயத்தாரோடு, முதல் அமைச்சர் மு .க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இதில் 14 கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தது. கோரிக்கை மனுவின் முதல் பக்கத்தில் தனது மகளின் உடற்கூறாய்வு அரிக்கையில் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்று கூறி உள்ள தாய் செல்வி, அங்கு ஆய்வு நடத்திய உண்மை அறியும் குழுவினர் இறப்பின் தன்மையை வைத்து அங்கு நடந்தது கொலை என்று தெரிவித்துள்ளனர் எனவே தனது மகளின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியங்கள் என்று பட்டியலிட்டு 14 குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் சிசிசிடிவி காமிரா காட்சிகளை காண்பிக்கவில்லை, மருத்துவனையில் இருந்து பள்ளி நிர்வாகிகள் ஓடிவிட்டனர், தனது மகளின் அறைக்கு செல்லவும் சக மாணவிகளுடன் பேசவும் அனுமதிக்கவில்லை.
கடிதத்தை தங்களிடம் தராமல் ஊடகங்களிடம் படித்து காட்டியது ஏன் ?, தனது கோரிக்கையை ஏற்காமல் முதல் பிரேத பரிசோதனை, மகள் விழுந்த இடத்தில் ரத்ததோய்வு இல்லை, மகளின் சடலத்தை யார் சொல்லி பிணகூறாய்வு அறையில் வைத்தார்கள் என கூறியுள்ளார்.
முதல் பிரேத பரிசோதனையில் பாலியல் தொடர்பான பரிசோதனை செய்யாமல் இருந்தது, பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமல் 2ஆவது உடற்கூறாய்வு, தனது மகளின் தங்கத்தோடு, வெள்ளிக்கொலுசு என்ன ஆனது என்பதற்கு இதுவரை தகவல் இல்லை, தனது மகளின் மரணத்தில் உள்ள மர்மங்களை தெளிவுப்படுத்தவும், ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கிடைக்கவும் ஆவணா செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை மனுவில் ஒரு வரி கூட கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரி ஒரு வரிகூட இடம் பெறவில்லை. ஆனால் வெளியில் வந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளதாக ஸ்ரீமதியின் தாய் செல்வி தெரிவித்தார்.
Comments