முகநூல் மூலம் பழகிய காதலால் நேர்ந்த துயரச் சம்பவம்... காதலன் ஏமாற்றியதால் மனம் உடைந்த காதலி தூக்கிட்டு தற்கொலை
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பேஸ்புக் மூலம் பழகி காதலித்து திருமண ஆசை காட்டி காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜமீன் பல்லாவரம் அடுத்த பச்சையம்மன் நகரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற கல்லூரி மாணவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் சுதீஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இருவரும் எல்லை மீறி பழகியதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னை திருமணம் செய்யாமல் காதலன் ஏமாற்றுவதை அறிந்த கீர்த்திகா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தற்கொலை செய்து கொண்டதற்கான கடிதம் மற்றும் அண்ணனுக்கு கீர்த்திகா அனுப்பிய ஆடியோ பதிவு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments