தனியார் விடுதி வரவேற்பறை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. மர்ம நபர்களுக்கு தேடி வரும் போலீசார்.!
சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் விடுதியின் வரவேற்பறையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வடபழனியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் நடத்தி வரும் தங்கும் விடுதிக்கு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் பெட்ரோல் குண்டை வரவேற்பறையில் வீசி விட்டு சென்றனர்.
இதில் அந்த குண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கண்ணாடிகள் நொறுங்கியது மட்டுமின்றி மர பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
Comments