போலி கையெழுத்து விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கரூரில், போலி கையெழுத்து விவகாரத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்க உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுண்ணாம்புக்கல் சுரங்க அமைப்பதற்காக தனது பெயரை போலி கையெழுத்திட்டு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, வரவணை கிராம நிர்வாக அலுவலர், சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில், வழக்கு பதியாமல் காலம் தாழ்த்தி வந்தது குறித்து கேட்டபோது, அலட்சியமாகவும், கேலி கிண்டலாகவும் பதிலளித்ததாக காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல் மீது மாவட்ட ஆட்சியரிடம் சமூக செயற்பட்டாளர் மோகன்ராஜ் என்பவர் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளரிடம் பரிந்துரை செய்யுமாறு வருவாய் அலுவலருக்கு ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
Comments