இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது யூஜிசி

0 4432
இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது யூஜிசி

இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

டெல்லி, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூஜிசியின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 21 போலி பல்கலைகழகங்களும், மாணவர்களுக்கு எந்தவித பட்டத்தையும் வழங்கும் அதிகாரம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments