சீன விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை ரத்து செய்தது அமெரிக்கா
கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்காவின் 26 விமான சேவைகளை சீனா ரத்துசெய்துள்ளதற்கு பதிலடியாக, அமெரிக்காவும் சீன விமானநிறுவனங்களின் 26 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவின் ஷியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை அமெரிக்காவும் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என்று வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் போது கோரானா தொற்று இல்லாத பயணிகளுக்கும் சீனா சென்றபிறகு தொற்று உறுதி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
Comments