சொந்த ஊரில் இருந்து காரில் சென்னை புறப்பட்ட ஸ்ரீமதியின் தாய் சபதம்..!
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் தனது வழக்கறிஞர் மற்றும் பெரிய நெசலூர் பஞ்சாயத்தார் இரண்டு கார்களில் சென்னை புறப்பட்டனர். பள்ளி நிர்வாகிகளுக்கு தண்டனை பெற்றுதரும் வரை ஓயமாட்டேன் என்று ஸ்ரீமதியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பல்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர், மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளிமுதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுக்கப்பட்டனர்.
பள்ளிக்கூட நிர்வாகிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து பெரிய நெசலூர் கிராமத்தில் வைத்து கருத்து தெரிவித்த ஸ்ரீமதியின் தாய் செல்வி, பள்ளிக்கூட நிர்வாகிகள் ஜாமீனில் தான் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டவில்லை என்றும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என்று தெரிவித்தார்
அதனை தொடர்ந்து நாளை சென்னையில் முதல் அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளதால். அவரை நேரில் சந்திப்பதற்காக இன்று பெரிய நெசலூர் கிராமத்தில் இருந்து செல்வி தனது குடும்பத்தினர் வழக்கறிஞர் ஊர் பெரியவர்கள் உள்ளிட்டோருடன் இரண்டு கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். முன்னதாக சென்னை நோக்கி நீதிகேட்டு நடைப்பயணம் செல்லபோவதாக கூறி இருந்த ஸ்ரீமதியின் தாய் செல்வி அந்த முடிவை கைவிட்டது குறிப்பிடதக்கது.
Comments