மேல் சிகிச்சைக்காக MGM மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதி..
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மேல்சிகிச்சைக்காக அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 23ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் நீர் தேங்கியது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இயக்குனர் பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா நலமுடன் உள்ளதாகவும், வதந்தி பரப்ப தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
Comments