அண்ணாமலை தொலைபேசி உரையாடல் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது.. மதுரை மாவட்ட பாஜக தலைவர் குற்றச்சாட்டு

0 3369
பாஜக தலைவர் அண்ணாமலை வேறுவேறு தருணங்களில் பேசியதை இணைத்து தொலைபேசி உரையாடல் போல் வெளியிட்டுள்ளதாக, அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வேறுவேறு தருணங்களில் பேசியதை இணைத்து தொலைபேசி உரையாடல் போல் வெளியிட்டுள்ளதாக, அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராணுவ வீரரின் மரணத்தை வைத்து அரசியல் செய்துவிடலாம் என அண்ணாமலை, சுசீந்திரனிடம் அலைபேசியில் கூறுவதுபோல் ஆடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுவருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த சுசீந்திரன், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்த அண்ணாமலை மதுரை வந்தபோது இருவரும் ஒரே காரில் பயணித்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே காரில் இருந்துகொண்டு எப்படி அலைபேசியில் பேச முடியும் என கேள்வி எழுப்பிய சுசீந்திரன், அண்ணாமலை காரிய கமிட்டி கூட்டத்தில் பேசியதை, தன்னுடன் பேசிய ஆடியோ பதிவுடன் இணைத்து எடிட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments