விஞ்ஞானபூர்வ ஊழல் வித்தைகள் காட்டுவதில், திமுகவினர் தங்கள் தலைமயையே விஞ்சி விட்டனர்" - அண்ணாமலை!

0 3864

தஞ்சை மாவட்டம் பேராவூரணி திமுக எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தின் மூலம், விஞ்ஞானபூர்வ ஊழல் வித்தைகள் காட்டுவதில், திமுகவினர் தங்கள் தலைமையை விஞ்சி விட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக எம்எல்ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு இலட்சத்திற்கு மேல் காசோலைகளை தான் பயன்படுத்த வேண்டும், வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலுத்தினால் வருமானவரித்துறை கேள்வி கேட்கும் என்று சாமானிய மக்களுக்கு சட்டம் சொல்கிறது என்றும் ஆனால், அசோக் குமார் அடிச்சது ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள், இப்போது தான் வெளிச்சப்படுகிறது என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments