சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நடிகை சோனாலி போகட்டின் உடல்.. கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை!

0 4889

பாஜகவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட்டின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கோவாவில் இருந்து டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக அவர் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு சோனாலியின் உடல் இறுதிச் சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது.

41 வயதான சோனாலி போகட் மர்ம மரணம் அடைந்த நிலையில் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படும் சோனாலியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் தென்பட்டதை உடற்கூறாய்வு அறிக்கையும் உறுதி செய்தது.

இவ்வழக்குத் தொடர்பாக சோனாலியின் மேலாளர் சுதீர் சங்கவான் மற்றும் உதவியாளர் சுக்வீந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கோவா காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments