இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கான போனஸை குறைக்க திட்டம்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கான போனஸை குறைக்க திட்டமிடுகின்றன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பொருளாதார மந்தநிலையை எதிர்நோக்கி உள்ளதால், அவற்றை சார்ந்துள்ள இந்திய நிறுவனங்களும் ஊழியர்களுக்கான சலுகைகளை குறைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட், மற்றும் விப்ரோ சமீபத்தில் தங்கள் ஊழியர்களிடம், ஊதியத்தின் சில பயன்களைக் குறைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தன. கவர்ச்சியான சம்பளங்களை அறிவித்து, பணியமர்த்துவதை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
Comments